“கலைஞரின் கொள்கைகளை பின்பற்றுவோம்” - ஆர்ஜேடி தலைவர்

57பார்த்தது
“கலைஞரின் கொள்கைகளை பின்பற்றுவோம்” - ஆர்ஜேடி தலைவர்
கலைஞரின் 101ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் மனோஜ் குமார் ஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “கல்வியால் தான் சமூக நீதிக்கான மாற்றம் வேகமாக நடைபெறும். அரசியல் சாசனத்தில் பதியப்பட்டிருக்கும் சமூகநீதிதான் நமக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்க வேண்டும். விளிம்பு நிலையில் வாழும் மாணவர்களுக்கு பல முன்னெடுப்புகளின் வழி, கல்வியை கொண்டு போய் சேர்த்த டாக்டர் கலைஞர் கருணாநிதியை பின்பற்றுவோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி