சீமான் சார்பில் இன்றும் ஆஜராகும் வழக்கறிஞர்கள்

73பார்த்தது
சீமான் சார்பில் இன்றும் ஆஜராகும் வழக்கறிஞர்கள்
நடிகை அளித்த திருமண மோசடி வழக்கு தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் இன்றும் ஆஜராக உள்ளனர். நேற்றைய தினமும் வழக்கறிஞர்கள் ஆஜராகி கால அவகாசம் கோரிய நிலையில், இன்றும் ஆஜராகி கூடுதல் அவகாசம் கேட்க உள்ளனர். சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது பணியாளர் கிழித்த நிலையில், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக சீமான் வீட்டு காவலாளியும், ஓட்டுநரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி