லாலுவின் ஜிகிரி தோஸ்தை தட்டித் தூக்கிய அமலாக்கத்துறை

71பார்த்தது
லாலுவின் ஜிகிரி தோஸ்தை தட்டித் தூக்கிய அமலாக்கத்துறை
சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் பண மோசடி புகாரில் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய நண்பரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவருமான சுபாஷ் யாதவ்-க்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுபாஷ் யாதவ் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களுக்குச் சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.30 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியாகியது. இந்நிலையில் சுபாஷ் யாதவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி