தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி பகுதியை சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) அமைப்பை தொடங்கினர். முதற்கட்டமாக நிதி திரட்டி சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேராவூரணி பெரிய ஏரியை தூர்வாரினர். அதேபோல் இதுவரை 211 ஏரி, குளங்களை தூர்வாரி சீரமைத்துள்ளனர். இதற்காக சுதந்திர தின விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்து ரூ.1 லட்சத்துக்கான நிதி உதவி வழங்கியுள்ளார்.