‘குபேரா’ - ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

80பார்த்தது
சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் ‘குபேரா’ படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி