கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதவணை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி அன்பரசி (27) வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 4-ங்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் இவருக்கு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் அன்று அன்பரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.