கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், இந்திய தரநிர்ணய அமைப்பு, பெங்களூரு கிளை நடத்தும் கிராம பஞ்சாயத்து அளவில் இந்திய தரநிலைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி (நிர்வாகம்) மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா ஆகியோர் தலைமையில் (04.12.2024) அன்று நடைபெற்றது.
இந்திய தரநிர்ணய அமைப்பு, முன்னாள் இயக்குநர் தாமரை செல்வன் பயிற்சியில் தெரிவித்ததாவது, இந்திய தரநிர்ணயம் தற்போது பொருட்களுக்கான தரத்தை முறைப்படுத்துதல், பொருட்களுக்கான ISI தரச்சான்றிதழ் வழங்குதல், ISO தரச்சான்றிதழ் வழங்குதல், ஆய்வகத்தில் பொருட்களுக்கான தரத்தை உறுதி செய்தல், தங்க நகைகளுக்கான HALLMARK தரச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் தங்கத்தின் தூய்மைத் தன்மையை உறுதிப்படுத்துதல், வெளிநாட்டு தயாரிப்புகளுக்கான தரச்சான்றிதழ் சேவை வழங்குதல், மின்னணு மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கான BIS தரச்சான்றிதழ்களுடன் கூடிய கட்டாய பதிவு சான்றிதழ்கள் மற்றும் BIS CARE செயலின் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.