கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், தளிஅள்ளி ஊராட்சியில் மாவட்ட ஊராட்சிகுழு (SFC) நிதியின் கீழ் ரூ. 5. 80 இலட்சம் மதிப்பீட்டில் தாதன்கொட்டாய் ரோடு முதல் விமலா வீடு வரை கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைத்தல் மற்றும் ஊராட்சி ஒன்றிய 15-வது நிதி மான்ய குழு ரூ. 4. 00 இலட்சம் மதிப்பீட்டில் ராமூர்த்தி வீடு முதல் சுப்பிரமணி தலைவர் வீடு வரை கழிவுநீர் கால்வாய் மற்றும்
சிமெண்ட் சாலை அமைத்தல் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு நிதி ரூ. 8. 80 இலட்சம் மதிப்பீட்டில் அனுசன் கொட்டாய் கதிர் அடிக்கும் களம் அமைத்தல், மாவட்ட ஊராட்சி குழு நிதி ரூ. 6. 75 இலட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைத்தல் ஆகிய பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே. மதியழகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து இனிப்புகளை வழங்கி துவக்கிவைத்தார்.