சிறுத்தை நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை

559பார்த்தது
சிறுத்தை நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள பென்னாங்கூர், அடவிசாமிபுரம், இஸ்லாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி மக்கள் வெளியே வர அச்சமடைந்தனர். இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி அன்று அடவிசாமிபுரம் பகுதியில் ஆடு ஒன்றை சிறுத்தை கொன்றதற்கான அடையாளம் இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி