ஓசூர் அருகே பொம்மாண்டப்பள்ளியை சேர்ந்தவர் எல்லப்பா மனைவி சம்பம்மா, (74). கணவர் உயிரிழந்த நிலையில், உடல் நலமின்றி குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு புகை பிடித்தல், மது அருந்துதல் பழக்கம் இருந்தது.
கடந்த, 5ஆம் தேதியன்று இரவு, 8: 00 மணிக்கு, குடிசையில் புகை பிடித்தார். அப்போது குடிசை தீப்பிடித்து எரிந்த நிலையில், தீயில் கருகி மூதாட்டி சம்பம்மா உயிரிழந்தார். அவரது பேரன் எல்லப்பா, (32), புகார் படி, மத்திகிரி போலீசார் நேற்று முன்தினம் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.