கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா. ஜ. க. ஒன்றிய அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி. மு. க. சார்பில் ஒசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை முன்பு இன்று ஓசூர் எம்எல்ஏ ஒய் பிரகாஷ் மற்றும் திமுகவினர் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். இதில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்