ஜெயலலிதா ஆட்சியை நாங்கள்தான் அமைப்போம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் நினைவேந்தல் கூட்ட பேரணியில் பேசிய அவர், "யார் என்ன சொன்னாலும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவரும் தகுதி, வல்லமை, திறமை கொண்ட ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. அவர் பின்னால்தான் 2 கோடி தொண்டர்கள் உள்ளனர். மக்கள் மனநிலை தற்போது தமிழக அரசுக்கு எதிராக மாறி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.