கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் டவுன் போலீசார் ஒன்னல்வாடி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே விளையாட்டு மைதானம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி இடமாக நின்ற 2 பேரை சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து கஞ்சா வைத்திருந்ததாக ஒன்னல்வாடி முரளி (27) சிவா (27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.