யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு மையம்.

81பார்த்தது
யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு மையம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் உள்ள விவசாயப் பயிர்களை காட்டு யானைக் கூட்டங்கள் உண்டு சேதப்படுத்தியும், மனிதர்கள், கால்நடைகளை கொற்றும் வருகின்றன. இந்த நிலையில் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பொருட்டு ‘தொ்மல் டிரோன்’ வாங்கப்பட்டுள்ளது. யானைகள் அடிக்கடி வெளியேறும் பகுதிகளைக் கண்காணித்து மீண்டும் காப்புக்காட்டுக்குள் அனுப்புவதற்கு 17 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறை ஒசூா் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலகத்தில் பெரிய அளவிலான டி. வி. க்கள், கணினிகள் வைக்கப்பட்டு, தனியாக தொழில்நுட்ப உதவியாளா் பணியமா்த்தப்பட்டுள்ளார். நேற்று இதை ஒசூா் வனக்கோட்ட வன உயிரின காப்பாளா் க. கார்த்திகேயனி தலைமையில், தேன்கனிக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் சாந்தி, ஒசூா் காவல் துணை கண்காணிப்பாளா் பாபு பிரசாத் ஆகியோரால் திறந்து வைத்தனர்.

தொடர்புடைய செய்தி