70 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை

56பார்த்தது
ஓசூர் தேர் பேட்டை சூடவாடியில் அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியின் அருகே இருந்த பழைய பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகளை கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டப்படவுள்ளது. இந்த பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. ஓசூர் மாநகராட்சியின் 30வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் கிருஷ்ண வேணி ராஜு பூமி பூஜையை துவக்கி வைத்தார். இதில் ஒசூர் மாநகர கிழக்கு பகுதி செயலாளர் ராஜு, ஓசூர் மாநகராட்சி சுகாதாரத்துறை தலைவர் என் எஸ் மாதேஸ்வரன், வட்ட செயலாளர், ஹேமக்குமார், அதிமுக நிர்வாகி சூடப்பா மற்றும் ஒப்பந்ததாரர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி