கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா. ஜனதா உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று ஒசூரில் தொடங்கியது. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கி. உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மாவட்ட சுற்றுப்பயண பொறுப்பாளர் மலர் கொடி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் மூத்த நிர்வாகியான கர்னூர் சீனிவாசனுக்கு முதலாவது உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மேலும் மேற்கு மாவட்டத்தில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கபட்டது.