கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிருக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று (செப்-25) பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.
இந்த முகாமில் ஓசூரில் இயங்கி வந்த டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தினர் கலந்து கொண்டு, காலிப் பணியிடங்களுக்கு பெண் பணியாளர்களை தேர்வு செய்தனர். இதில், 146 பேர் கலந்து கொண்டதில் 31 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.