கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கங்காவரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் இவரது மகன் அரவிந்த் (22). இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் அங்குள்ள பட்டாளம்மன் கோயில் அருகே உள்ள ஒரு மாந்தோப்பில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.