திருச்சி: சென்னக்கரை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி வேல்முருகன், நேற்று (ஜன.13) சிறுகாம்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார். இருட்டான பகுதியில் அமர்ந்து மது குடித்தபோது பாட்டிலில் ஏதோ அடைப்பு இருந்திருக்கிறது. உடனடியாக செல்போன் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது மது பாட்டிலில் இறந்த நிலையில் தவளை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.