திருப்பூர்: ஊத்துக்குளி அருகே காவுத்தம்பாளையம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த முருகசாமி கூறுகையில், ''611 நாட்களாக போராட்டத்தை நடத்தியும், அரசின் கவனம் திரும்பாதது, வருத்தமளிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்'' என்றார்.