தமிழ்நாட்டில் திருமண மண்டபங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான இழப்பை தொடர்ந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 5% கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடம்பரமான வெளிச்சத்துடன் செயல்படக்கூடிய பெரிய வணிக நிறுவனங்களுக்கு 5% கூடுதல் கட்டணத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.