கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, எர்ணாகுளம் - கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை -பாலக்காடு பாலறுவி எக்ஸ்பிரஸ் ரயில் ஆலுவா இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம் - ஷோரனுர் இடையேயான வேணாடு எக்ஸ்பிரஸ் சாலக்குடியில் பகுதியாக ரத்து செய்யப்பட்டது.