28 நாட்களில் மாதவிடாய் சுழற்சி என்றால் 12 முதல் 14 நாளில் கருமுட்டை வெளிப்படும். அதே சமயம் சுழற்சி 35 நாட்களாக இருந்தால் 21வது நாளில் கருமுட்டை வெளிப்படும். எனவே கருமுட்டை வெளிவரும் காலத்தை கணக்கில் வைத்து உடலுறவு வைத்துக் கொள்வது அவசியம். கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறி ஃபெலோபியன் குழாய்க்கு நகர்ந்து 12-24 மணி நேரம் அங்கே நிற்கும். இந்த சமயத்தில் உடலுறவு கொண்டால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.