மறியல் செய்த பொதுமக்களை தடுத்து நிறுத்திய போலீசார்

78பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குழி பறித்து ஊத்து போட்டு தண்ணீர் எடுத்து சுமார் 1 கீலோ மீட்டர் தொலைவிற்கு தூக்கி வருகின்றனர். அது மட்டுமின்றி 2 கீலோமீட்டர் தொலைவு தூரம் உள்ள மகிளிப்பட்டி சென்று குடிநீர் குழாயில் ஏர் வால்வில் கசிந்து வரும் தண்ணீரை குடத்தில் பிடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பலமுறை தண்ணீர் கேட்டு பல முறை ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் வழங்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்வதற்கு வந்தனர். அப்போது இலாலாப்பேட்டை போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் ஒரு மணி நேரமாக பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்தி