ஸ்ரீ மகா காளியம்மன் மகா கும்பாபிஷேக விழா

68பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ தண்ணீர்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. நேற்று காலை மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி கோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் மேளதாளம் முழங்க தீர்த்தம் எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து இரண்டு கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் இன்று காலை கோவில் மேல் உள்ள கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.


அதனை தொடர்ந்து சுவாமிக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. குளித்தலை சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி