கரூர் மாவட்டம் தோகைமலையில் சமூக உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் மூத்த குடிமக்களை ஆற்றலளிக்கும் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குமுளி வோசார்டு மற்றும் திருச்சி ஓ. டி. ஏ நிறுவனங்கள் சார்பாக உலக மூத்த குடிமக்கள் தினம் விழா நடந்தது. தணியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திருச்சி ஓ. டி. ஏ நிறுவனர் லோபிதாஸ் தலைமை வகித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் தனமாலினி கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சின்னையன், அம்பாள் குமார், புவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தோகைமலை ஒன்றியக் குழு தலைவர் சுகந்தி சசிகுமார் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற முதியவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பென்ஷி சில்வஸ்டர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து முதியவர்களுக்கான இசை நாற்காலி, பாடல்கள், பேசுதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் வெற்றி பெற்ற முதியவர்களுக்கும் கலந்து கொண்ட அனைத்து முதியவர்களுக்கும் பரிசுகள் அளித்து உற்சாகப்படுத்தினர்.