கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் ஆய்வாளர் ஸ்ரீவித்யா தெற்கு மணத்தட்டையில் சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு நாப்பாளையத்தைச் சேர்ந்த கிஷோர், தேவதானத்தைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் உதவியுடன் காவேரி ஆற்று மணலை மூட்டைகளாக கட்டி பைக்கில் கொண்டு வந்து சேகரித்துள்ளனர். புகாரின் பேரில் மூன்று பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து கிஷோர், சூர்யாவை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 80 மணல் மூட்டைகள், ஒரு பைக் பறிமுதல் செய்தனர்.