கரூர் மாவட்டம் போத்துராவுத்தன்பட்டி அங்கன் வாடி மையம் வாட்டர் டேங்கு சென்டர் பல வருடங்களாக இயங்கிக் கொண்டு வருகிறது.
இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர், தற்போது நேற்று பெய்த மழையால் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் காட்சியளிக்கிறது. பள்ளிக்குழந்தைகள் நடந்துவர மிகவும் சிறமத்துக்கு உள்ளாகின்றனர் இது சம்மந்தமாக அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்களா.? பள்ளிகுழந்தைகளின் சிறமங்கள் போகுமா.? என்று பொதுமக்கள் கேள்விகள் எழுப்புகின்றனர் மேலும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுக்கும் எந்த பயனும் இல்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர் மேலும் இது சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்கா விடில் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி
போராட்டம் நடத்துவோம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.