தெலுங்கானா: மேட்சல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு மாணவிகளின் ஆபாச படம் பதிவு செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் விடுதி கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு 300 ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் விடுதி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளது என்று குற்றஞ்சாட்டிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் கல்லூரியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.