சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜோஸ்லின் வைல்டன்ஸ்டீன் காலமானார். பிளாஸ்டிக் சர்ஜரிகளுக்குப் பெயர்போன இவர், ‘கேட் வுமன்’ என்று அழைக்கப்பட்டார். தனது கண்களை பூனைபோல் மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததற்காக அவர் கேட் வுமன் என்று அறியப்பட்டார். கோடீஸ்வரரான 84 வயது ஜோஸ்லின் வைல்டன்ஸ்டீன் நுரையீரல் தக்கையடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.