தெலங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவன் சிவகிஷோர், தனது வகுப்பு தோழிக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். இதனையறிந்த தோழியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், வாழ்த்து சொன்ன சிவகிஷோரை தாக்கியுள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவர் சிவகிஷோர், தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை விவகாரத்தை அறிந்த, மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.