ரஷ்யாவைச் சேர்ந்த படுலினா (34) என்ற பெண், தொடர் சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு நிமோனியாவாக இருக்கும் என நினைத்த அந்த பெண், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, அவரது நுரையீரலில், Spring இருப்பது கண்டறியப்பட்டது. த்ரோம்போம்போலிசம் என்ற ரத்த உறைவு நோயால் பாதிக்கப்பட்டபோது அவரின் உடலில் பொருத்தப்பட்ட குழாய்கள், ரத்த ஓட்டம் மூலம் நுரையீரலுக்குள் வந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.