நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரு. மாணிக்கம் படத்தை பார்த்த ரஜினிகாந்த் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு நல்ல படத்துக்கு அடையாளம். படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு மூன்று, நான்கு நாட்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்கணும். அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம் நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும். அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு என பாராட்டியுள்ளார்.