தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியம் என்பதால் அதற்காகவே புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தனித்தனியாக சமையல் எரிவாயு இணைப்பு இல்லாதவர்களும் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தாக அதிகாரிகள் புகாரளித்துள்ளனர்.