திருவள்ளூர் மாவட்டத்தில் மே 29, 2003 அன்று அதிகபட்ச வெயில் பதிவானது. இங்குள்ள திருத்தணியில் 48.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே தமிழ்நாட்டில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்ப நிலை ஆகும். அதன் பின்னர் இந்த அளவு வெப்பநிலை எங்கும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நீலகிரியில் 1904-ம் ஆண்டு ஜீரோ டிகிரி செல்சியஸ் பதிவானது. இதுவே தமிழ்நாட்டில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.