கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொசூர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (40). இவருக்கும் இவரின் கணவரின் தம்பி தங்கராசு என்பவருக்கும் இடம் சம்பந்தமாக கடந்த இரண்டு வருடங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி வீட்டில் இருந்த மல்லிகாவை தங்கராசு தகாத வார்த்தையால் திட்டி, தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். மேலும் மண்வெட்டியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து கைது செய்தனர்.