கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ தண்ணீர் பள்ளியைச் சேர்ந்தவர் மூர்த்தி மகள் ராகவி (17). இவர் கடந்த 6 ஆம் தேதி அன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ராகவி பாட்டி வெண்ணிலா அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.