குளித்தலை நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

85பார்த்தது
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணமோசடிகள் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 470 நாட்களாக சிறையில் இருந்துள்ளார்.

கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் பலமுறை அவர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

அதனை அடுத்து கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவிராஜா தலைமையிலும் மற்றும் மேற்கு ஒன்றிய திமுகவினர் ஒன்றிய கழக அவைத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமையிலும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு க ஸ்டாலின், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி ஆகியோர்களை வாழ்த்தியும் வாழ்த்து கோஷங்களை முழக்கமிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி