கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் வயது 55 இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் மயிலாடும்பாறை சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சந்தோஷ் என்பவர் அதிவேகமாக பொலிரோ பிக் அப் வாகனத்தை ஓட்டி வந்து மோதியதில் சங்கர் படுகாயம் அடைந்தார். சங்கர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.