கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்ன களத்துப்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன் (72). இவர் நேற்று இரவு தனது பைக்கில் கோட்டைமேடு சரக்கு பாலம் அருகே அதிவேகமாக ஓட்டி சென்று எதிர் திசையில் முகப்பு வெளிச்சத்துடன் வந்த மாட்டு வண்டியில் முன் பகுதியில் மோதி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து குணசேகரன் மருமகன் அபிலன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை.