கரூர் மாவட்டம் குளித்தலை சோழகர் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (68). இவர் ஆடி மாத பிறப்பிற்காக தனது வீட்டில் விளக்கு ஏற்றிய போது தவறுதலாக சேலையில் தீ பிடித்துள்ளது. இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அதன்பிறகு கரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.