அய்யர்மலையில் 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு

65பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் 1017 படிக்கட்டுக்களை கொண்டு மலை உச்சியில் அமையப்பெற்ற திருத்தலமாகும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் ரோப்கார் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட ரோப் கார் சேவை பணிகள் தற்போதைய திமுக ஆட்சி காலத்தில் நிறைவடைந்தது.
ரோப்கார் சேவையானது கடந்த 24ஆம் தேதி அன்று பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டது. மறுநாள் 25ஆம் தேதி காலை ரோப் கார் மேல் உள்ள கம்பி வடம் சக்கரத்திலிருந்து நழுவியதால்
அதன் பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் சுமார் பத்து முறை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர், கண்காணிப்பு பொறியாளர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், சென்னை ஐஐடி பேராசிரியர்கள், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், கட்டுமான ஆராய்ச்சி மையம் பேராசிரியர்கள், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையர்
உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 11 மணியளவில் ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது முதற்கட்டமாக ரோப்கார் கட்டுப்பாட்டு அறையில் பழுதான நிகழ்வை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வல்லுனர் குழுவினர் கண்காணித்தனர். பிறகு ரோப்காரில் கம்பி வடம் நழுவிய இடத்தை ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி