கரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி தோகைமலை கிழக்கு ஒன்றியம் நெய்தலூர் காலனியில் திருப்பரங்குன்றம் மலையை காக்க அறவழியில் அறப்போராட்டம் இன்று நடைபெற்றது. தோகைமலை ஒன்றிய தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் முன்னால் தோகைமலை ஒன்றிய தலைவர் ராஜாபிரதீப் மற்றும் பொதுமக்கள், நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலரும் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி அறப்போராட்டம் செய்தனர்.