வீட்டை எவ்வளவு சுத்தமாக பராமரித்தாலும் ஈக்கள், கொசுக்களின் தொல்லை அதிகமாகத்தான் இருக்கும். இதை சரி செய்ய ஒரு தேங்காய் சிரட்டையை எடுத்து அதில் சிறிது அடுப்புக்கரி சேர்க்க வேண்டும். இதில் வேப்பிலை, ஓமவல்லி இலைகள், சிறிது கற்பூரத்தை சேர்த்து பற்ற வைக்க வேண்டும். இந்தப் புகையை ஈக்கள், கொசுக்கள் இருக்கும் இடத்தில் காட்டினால் புகையின் நெடி தாங்காமல் அனைத்தும் ஓடிவிடும். செயற்கை விரட்டிகளை பயன்படுத்துவதை விடுத்து இதை பயன்படுத்தலாம்.