இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "கத்தி" என்ற படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். மேலும் பல பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்ற இவரை விமான நிலைய அதிகாரிகள் சிறைபிடித்தனர். அவர் பார்ப்பதற்கு இந்தியர் போல் இல்லை எனவும், போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியுள்ளதாகவும் சந்தேகப்பட்டு கைது செய்துள்ளனர். பின்னர் கூகுளில் அவரைப்பற்றி தேடிப்பார்த்து பின்னர் விடுவித்துள்ளனர்.