கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வரவனை கிராமம், பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் மூலம் கரூர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்- கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் பண்டுதகாரன்புதூர் மண்மங்கலம் கரூரில் ஆடு மற்றும் கோழி வளர்ப்பு பயிற்சி வரவனை ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் கிராமப் புற பகுதிகளில் பொருளாதார சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சிகளாக, வரவனை ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
சென்னையில் இருந்து கோ. ப. ஆனந்த் மற்றும் பாலாஜி அரிக்கேன் வெடஸ் அறக்கட்டளை மூலமாக சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வரவனை ஊராட்சி பொதுமக்களுக்கு சுய தொழில் முன்னேற்றம் குறித்து பேசினார்கள்.
இதில் திரு மு. கந்தசாமி வரவனை ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள், பசுமைக்குடி தன்னார்வலர்களும் கலந்து கொண்டார்கள்.
மூன்று நாள் பயிற்சிக்கு சுமார் 150 நபர்கள் கலந்து கொண்டனர்.
3 நாட்களும் மக்களை பசுமைக்குடி மூலம் வாகன வசதி செய்து அழைத்து வரப்பட்டது. மதிய உணவுடன் , கலந்து கொண்ட அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.