முள்தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 200 பறிமுதல்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இந்த கல்லூரி மருத்துவமனை பின்புறம் முள் தோட்டம் உள்ளது இந்த பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக சிறப்பு பெண் காவல் உதவி ஆய்வாளர் அழகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் ஜூலை 24ஆம் தேதி இரவு 8: 30- மணி அளவில், மருத்துவமனை பின்புறம் உள்ள முள் தோட்டத்தில் சென்று சோதனை மேற்கொண்ட போது, அப்பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது.
இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பசுபதிபாளையம் அருகே உள்ள
எஸ். வெள்ளாளப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பெரியசாமி, வடக்கு காந்த கிராமம் ஜே ஜே நகரை சேர்ந்த கார்த்திக், அருணாச்சலம் நகரை சேர்ந்த மகேஸ்வரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ. 200-யும் பறிமுதல் செய்த காவல்துறையினர், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.