நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.

1917பார்த்தது
நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.
பாலவிடுதியில், நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சேர்வைக்காரன்பட்டி, தலைவாசல், வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் வயது 66. இவர் பாலவிடுதி பகுதியில் உள்ள அய்யனார் மேரேஜ் ஹால் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மாரியப்பனின் பின்னால் மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.

இந்த விபத்தில் நிலை குலைந்து கீழே விழுந்த மாரியப்பனுக்கு தலை, வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாரியப்பனின் மகன் பாண்டியராஜன் வயது 34 என்பவர், காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாலவிடுதி காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி