பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னுரிமை அளிக்கும் மணவாடி ஊராட்சி

58பார்த்தது
பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னுரிமை அளிக்கும் மணவாடி ஊராட்சி
தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணவாடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மஞ்சப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக பள்ளியினை ஆய்வு செய்ய வந்த கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஊராட்சி நிர்வாகத்தினை பாராட்டியும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் மஞ்சப்பைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பள்ளி கல்வித்துறை மாவட்ட வட்டார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி