கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா வீரமலை கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (44) இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று முன்தினம் (அக்.,22) தனது உறவினர்களுடன் நடுவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அங்கு வந்த சிறும்பாயி, மணிவண்ணன், சக்தி, சுதா ஆகிய 4 பேரும் ராஜலட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி வயிற்றில் உதைத்து கீழே தள்ளி உள்ளனர். மேலும் உடனிருந்த தங்கமாளை அறிவாளால் தலையில் தாக்கியுள்ளனர்.
காயம்பட்ட இருவரும் கரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் 4 பேர் மீது நேற்று (அக்.,23) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.